சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
ADDED : 1457 days ago
நாகசைதன்யா - சமந்தா பிரிவுக்கு பல காரணங்கள் பகிரப்பட்டு வருவதால் அதற்கு பதில் கொடுத்திருந்தார் சமந்தா. மேலும் இந்த விவகாரத்தில் பெண்ணை மட்டும் சமூகம் குற்றம் சொல்கிறது என கூறியிருந்தார். இவருக்கு வனிதா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛இங்கே சமூகம் என்று எதுவுமில்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள் நாம் பதிவு செய்யும் போட்டோக்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.