உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூந்தல் அழகின் ரகசியம்: சாய் பல்லவி வெளியிட்ட தகவல்

கூந்தல் அழகின் ரகசியம்: சாய் பல்லவி வெளியிட்ட தகவல்

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்து திரைக்கு வந்துள்ள லவ்ஸ்டோரி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பும், அதிகம் மேக்கப் போடாத அவரது இயற்கையான அழகு குறித்தும் சோசியல் மீடியாவில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் தனது அழகை பராமரிப்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அதில், ‛நான் எனது கூந்தல் மற்றும் தோலை பராமரிப்பதற்கு செயற்கையான ரசாயனம் கலந்த ஷாம்பு, சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துவதே இல்லை. இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களையே கூந்தல் மற்றும் உடம்புக்கு பயன்படுத்திக்கொண்டு வருகிறேன். சினிமாவிற்காககூட நான் கூந்தலில் ஹேர் கலரிங் செய்து கொள்வதில்லை. இயற்கையான கூந்தலுடன்தான் நடித்து வருகிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, எனது அழகை பராமரிக்க ஆரோக்யமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். அதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் உடம்பின் உள்புறம், வெளிப்புறம் இரண்டுமே ஆரோக்யமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !