அக்டோபர் 21ல் ஷங்கர்- ராம்சரண் படம் தொடங்குகிறது
ADDED : 1457 days ago
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் பான்இந்தியா படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ராஜமவுலி, ரன்வீர்சிங் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும், ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சுனில், அஞ்சலி, மலையாள நடிகர் ஜெயராம் உள்பட பலர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக இப்படத்திற்கு விஸ்வம்பரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக புனேயில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முதல்கட்ட படப்பிடிப்பில் ராம் சரண்-கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட உள்ளது.