யாரை சொல்கிறார் செல்வராகவன்
ADDED : 1455 days ago
நடிகராகவும் பயணித்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன். சாணிக்காயிதம் படத்தை முடித்துவிட்டர் அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் ‛‛இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என செல்வா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே உள்ள மோதலை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர்.