அடுத்தாண்டு பிப்.,4ல் வெளியாகும் ஆச்சாரியா
ADDED : 1453 days ago
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆச்சாரியா. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததும் முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 07ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆச்சாரியா வெளியீட்டை பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.