உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் மேனன்

சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் மேனன்

வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போலீசாக சூரியும் அவரது தந்தையாக விஜய் சேதுபதியும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் மேனன் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !