ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் ராம் - நிவின்பாலி
ADDED : 1457 days ago
மலையாள திரை உலகில் இளம் நடிகர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் நிவின்பாலி. அதேசமயம் தமிழில் ரிச்சி என்கிற படத்தில் நேரடியாக அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராம் டைரக்சனில் மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் நிவின்பாலி. கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இயக்குனர் ராம் மற்றும் நிவின்பாலி இருவருக்குமே பிறந்த நாள். ஒரு படப்பிடிப்பில் இயக்குனரும் ஹீரோவும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது என்பது ஆச்சரியமான விஷயம் தான். அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிவின்பாலி மற்றும் இயக்குனர் ராமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.