மகன் பிறந்தநாள்- ஐஸ்வர்யாவின் வாழ்த்து
ADDED : 1560 days ago
தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து 2006ல் யாத்ரா, 2010ல் லிங்கா என்ற மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் நேற்று தங்களது மூத்த மகனான யாத்ராவின் 15ஆவது பிறந்த நாளை தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.
அதையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என் முதல் குழந்தை, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். கடவுள் உன்னை நேசிப்பார். கடவுள் உன் வாழ்க்கையில் அனைத்தையும் வழங்குவார் என்று பதிவிட்டுள்ளார்.