உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய வீட்டில் குடியேறும் நாகசைதன்யா

புதிய வீட்டில் குடியேறும் நாகசைதன்யா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 2-ந்தேதி தாங்கள் சட்டப்படி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், ஊடகங்களில் பலதரப்பட்ட வதந்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், நாகசைதன்யாவுடன் தான் இணைந்து வாழ்ந்து வந்த வீட்டில் இப்போதும் சமந்தாவே வாழ்ந்து வருகிறார். அதனால் அங்கிருந்து வெளியேறியுள்ள நாகசைதன்யா தற்போது புதிய பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அங்கு விரைவில் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஒரு பங்களா வாங்கினார் நாகசைதன்யா. அதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அந்த பங்களா தயாரானதும் அதில் நாகசைதன்யா குடியேறுவார் என்றும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !