உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் : அதிதிராவ் விருப்பம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் : அதிதிராவ் விருப்பம்

தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது தெலுங்கில் சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மகா சமுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதிதிராவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அக்டோபர் 14-ந்தேதி வெளியாகும் மகாசமுத்திரம் படத்தில் நான் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படம் வெற்றி பெற்று எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்றார். அதோடு, மறைந்த பழம்பெரும் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அதிதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !