உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்., 14 அண்ணாத்த டீசர் ரிலீஸ்

அக்., 14 அண்ணாத்த டீசர் ரிலீஸ்

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்தப்படியாக டீசர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி அக்.,14ல் ஆயுத பூஜையை முன்னிட்டு மாலை 6மணிக்கு அண்ணாத்த டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். கிராமத்து கதையில் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த ஒரு படமாக இந்தப்படம் உருவாகி உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !