உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவால்களே மாற்றத்தை தரும் - அசத்தும் சினேகா

சவால்களே மாற்றத்தை தரும் - அசத்தும் சினேகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார். இருப்பினும் இடையிடையே ஓரிரு படங்களில் தலைக்காட்டினார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து, மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக ‛‛'நீங்கள் சவாலை எதிர் கொண்டால் மட்டுமே மாற்றத்தை பெற முடியும்'' என பதிவிட்டுள்ளார். சினேகாவின் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !