உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத பணவரவு

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத பணவரவு

இந்த மாதம் சுக்கிரன் நவ. 22ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். அதோடு சனியும், கேதுவும் நன்மை தருவார்கள். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் கேதுவால் கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு, பண இழப்பு முதலியன டிச.2 க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அவரால் செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை வரலாம்.

பெண்கள் குடும்ப வாழ்வில் குதுாகலம் அடைவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். சுக்கிரனால் பொருளாதார வளம் பெருகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. மதிப்பு, மரியாதை கூடும். நவ.22க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் அடைவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம். கண் தொடர்பான நோய்கள் வரலாம்.

சிறப்பான பலன்கள்:

தொழில் அதிபர்களுக்கு சனி பகவான் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்.  வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி நிதியுதவியால் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர். எதிர்பார்த்த கடனுதவி எளிதாக கிடைக்கும். தரகு, கமிஷன் தொழில் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும் வகையில் வளர்ச்சி இருக்கும். மனது மகிழும் வகையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.


அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நவ.22 க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மாத முற்பகுதியில் சலுகை  கிடைக்கும். ஐ.டி. துறையினருக்கு நவ.22 க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வக்கீல்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.


அரசியல்வாதி, பொதுநல சேவகர்களுக்கு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று புகழும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கீரை வகைகள், காய்கறிகள்,
எள், கொள்ளு போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும்.

சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்கள் பயணத்தால் உடல்நலக்குறைவுக்கு ஆளாவர்.
வியாபாரிகள்  பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
அரசு வேலையில் இருப்பவர்கள் நவ.22க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்  சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும்.  


மருத்துவர்களுக்கு போட்டியாளர்களால் இடையூறு தலைதுாக்கும்.
ஆசிரியர்களுக்கு முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக அக்கறையுடன் செயல்படவும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
விவசாயிகளுக்கு சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப் போகும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

* நல்ல நாள்: நவ.18,19,20, 21,24,25,28,29,30, டிச.6,7,8,9,10,15,16
* கவன நாள்: டிச.11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
●  புதனன்று விஷ்ணுவுக்கு துளசி மாலை
●  செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !