சபரிமலையில் உணவு விலை நிர்ணயம்
ADDED :2263 days ago
சபரிமலை : சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயித்து பத்தணம் திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வடை, போண்டா, சப்பாத்தி, புரோட்டா 10 ரூபாய்; ஆப்பம், இடியாப்பம் 9 ரூபாய்; கிழங்கு, பட்டாணி, கடலை கறி 25 ரூபாய்; வெஜிடபிள் குருமா, பருப்பு குருமா 20 ரூபாய்; தக்காளி குருமா 30 ரூபாய்; மெஷின் காப்பி 150 மில்லி 15 ரூபாய்; 200 மில்லி 20 ரூபாய்; சாப்பாடு 60 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பட்டியலை தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் ஓட்டல்களில் வைக்க வேண்டும் என, பத்தணந்திட்டா கலெக்டர் பி.பி.நுாகு உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் செய்யலாம். விரைவில், இதற்காக, இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட உள்ளது.