மாளிகைப்புறம் மேல்சாந்தி பொறுப்பேற்பு
சபரிமலை, : சபரிமலை : சபரிமலை கோவிலின் மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க சேவா சங்கத்துடன் தன்னார்வ அமைப்புகளும் கைகோர்த்துள்ளன.
கேரள மாநிலம் சபரிமலையில் மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆவணி 1ம் தேதி சபரிமலையில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில் ஆலுவாவை சேர்ந்த எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐப்பசி ஒன்றாம் தேதி முதல் சபரிமலையில் தங்கியிருந்தார். கார்த்திகை முதல் தேதி அவர் பொறுப்பேற்க வேண்டும். சில காரணங்களால் அவர் பதவியேற்கவில்லை. நேற்று காலை அவர் பொறுப்பேற்றார். மாளிகைப்புறம் கோயில் முன்பு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தி, அவரை மூலஸ்தானத்துக்குள் அழைத்து சென்றார். இனி இவர் அடுத்த ஐப்பசி இறுதி வரை சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் செய்வார்.