கள்ளக்குறிச்சியில் சாய்பாபா பிறந்த நாள் வைபவம்
ADDED :2179 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்தநாள் வைபவம் நேற்று நடந்தது.சத்ய சாய் சேவா நிறுவனங்கள், சத்ய சாய் சேவா சமிதி சார்பில் பிறந்த நாள் விழா ராஜா நகரில் நடந்தது.
அதிகாலை சத்ய சாய் சுப்ரபாதம், பிரசாந்தி கொடியேற்றம், பாபா உருவ படத்துடன் நகர சங்கீர்த்தனம், சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. சேலம் முரளி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பாலவிகாஸ் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் சாய் பாபா உருவப்படத்தினை அலங்கரித்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலம் நடத்தினர்.