உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் அடிக்கடி கீழே விழுகிறார்களா?

குழந்தைகள் அடிக்கடி கீழே விழுகிறார்களா?

ஆஞ்சநேயரை தரிசிக்கும் முன் சீதாராமரை தரிசிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவர்களை வணங்கிய பிறகு, தன்னை வணங்கினால், ஆஞ்சநேயர் மகிழ்ச்சி அடைவார். ‘ஆஞ்சநேயரே சரணம்’ என்று வணங்குவதை விட, ‘ராமதாச ஆஞ்சநேயா சரணம்’ என்று சொல்லி வணங்கினால், அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர் ராம தம்பதிகளை இணைத்து வைத்தவர் என்பதால், திருமணத்தடையுள்ள பெண்கள் இவரை சனிக்கிழமைகளில் வணங்கி வரலாம். குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து அடிபட்டால், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது சிறந்த வழிபாடாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !