ஐயப்பன் ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பு
ADDED :2244 days ago
ராசிபுரம்: பட்டணம் வந்த ஐயப்பன் ரதத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐயப்ப சேவா சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள், ஐயப்பனை தரிசிக்கும் வகையில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ரதம் தமிழகம் முழுவதும் சென்று இறுதியில் சபரி மலை செல்ல உள்ளது. நேற்று, ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்திற்கு ரதம் வந்தது. அப்போது, பெண்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவியர் நம் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நடனங்கள் ஆடியபடி ரதத்திற்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.