ஊட்டி முத்து மாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா
ADDED :5032 days ago
ஊட்டி: -ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் 22ம் தேதி 19வது ஆண்டு கரக உற்சவம் விழா நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அபிஷேக ஆராதனை, 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, 1.00 மணிக்கு அன்னதானம்,மாலை 4.00 மணிக்கு அம்மன் கரக உற்சவ விழாவை தொடர்ந்து கங்கை பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் கரக உற்சவ குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.