உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் சொர்ணாகர்ஷன பைரவர் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

சதுரகிரியில் சொர்ணாகர்ஷன பைரவர் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

சதுரகிரி: ஆன்மீகம் தழைக்கவும், சைவம் மென்மேலும் வளரவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து நாட்டு மக்கள் நலமுடன் வாழவேண்டி, சித்தர்கள் பூமியாம் சதுரகிரி ஆனந்தவல்லியுடன் வீற்றிருக்கும் சுந்தர மகாலிங்கத்தின் திருமலை அடிவாரத்தில் சர்வேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சர்வேஸ்வரர் சன்னதியில் எம்மான் வாதவூரர் மாணிக்கவாசகனார் ஓதிய திருப்பதிகங்களை தில்லை நடராஜர் கைவருந்த எழுதிய எட்டாம் திருமுறையான திருவாசகம் முற்றோதுதல் ஞானபெருவேள்வியை 08.12.2019ம் தேதி காலை 7.00 மணிக்கு தத்புருஷ தேசிகர் கூனம்பட்டி அடியார் சிவ.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தும், பிறகு காலை 11.00 மணிக்கு வானவேடிக்கையுடன் கைலாய வாத்தியம் முழங்க, கடம் புறப்பாட்டுடன் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுதல், பின்னர் மதியம் 12.00 மணிக்கு எம்பெருமான் சர்வேஸ்வரருக்கு தத்புருஷ தேசிகர் பழனிவேல் அவர்கள் தூய வெண்ணீற்றொளிகமழும் புண்ணியர் அருணந்திசிவம் அவர்கள் தலைமையில் மகா சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறவுள்ளது

கார்த்திகை மாதம் 22ம் தேதி 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியும், அஸ்வினி நக்ஷத்ரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 11.10 மணி முதல் 11.50 மணிக்குள் கும்ப லக்னத்தில் மஹா பூர்ணாஹூதியும், அதனைத் தொடர்ந்து அம்பாள் விமான கலச அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்களும்

நிகழ்ச்சி விபரம்:
தேதி/ கிழமை        - நேரம்     - பூஜையின் விபரம்

கார்த்திமை மாதம் -  20ம் தேதி  - 6.12.2019 வெள்ளிக்கிழமை - காலை 8.00  மணி முதல் -   கணபதி பூஜை, புண்யாஹவாசனம் வாஸ்து சாந்தி,  ம்ருத்சங்கரயங்கணம், ரக்ஷாபந்தனம், கோ பூஜை, யாக சாலை பிரவேசம், அம்பாள் மூலமந்திர ஹோமம், முதல்கால பூர்ணாஹூதி, திருமுறைபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்

மாலை 5.00 மணி முதல் -  51 சக்திபீட அம்பாள் மூலமந்திர ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், இரண்டாம் கால பூர்ணாஹூதி, திருமுறைப்பாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

கார்த்திகை மாதம் -  21ம் தேதி  -07.12.2019  -சனிக்கிழமை - காலை 8.00 மணி முதல்- அம்பாள் நவமாவரண பூஜை மூலமந்திர ஹோமம், பைரவர் மூலமந்திர ஹோமம், மூன்றாம் கால பூர்ணாஹூதி, திருமுறை பாராயணம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல்.

மாலை 5.00 மணி முதல்  - தேவி அதர்வஸிர்ஷ ஜப பாராயணம் அம்பாள் மூலமந்திர ஹோமம், பைரவர் மூலமந்திர ஹோமம், நான்காம் கால பூர்ணாஹூதி, திருமுறைபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

கார்த்திகை மாதம் - 22ம் தேதி  08.12.2019 - ஞாயிற்றுக்கிழமை -  காலை 8.00 மணி முதல் - அம்பாள் மூலமந்திர ஹோமம், பைரவர் மூலமந்திர ஹோமம், ஸபர்சாஹூதி, வஸோதாரா, நாடி சந்தானம், யாத்ராதானம்.

காலை 11.10 மணி முதல் 11.50 - மணிக்குள் - கும்பம் புறப்பாடு, விமான கலசத்திற்கும் மூலவர்க்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும், அம்பாளுக்கும், பைரவர்க்கும் சகல அபிஷேகமும், அலங்காரமும் மஹா தீபாராதனையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !