மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை திருவிழா துவக்கம்
ADDED :2102 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று (டிச.,4) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கலச பூஜை நடத்தினர். பின்னர் கொடிமரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. மண்டபம் முன் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.