சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில், அஷ்டமி பூஜை
ADDED :2484 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத் திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பைரவர் வழிபாடு நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.