சமுக்தியாம்பிகைக்கு மானசாபிஷேக விழா
ADDED :2099 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி தாடகை மலை அடிவாரம் சமுக்தியாம்பிகை, காலசம்ஹார பைரவர் கோவிலில், மானசாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, சமுக்தியாம்பிகைக்கு, 300 கிலோ பழச் சாற்றினால், அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 120 கிலோ பழங்களால் ஆன மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சமுக்தியாம்பிகை, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை மதுயாகவ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.