கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :2130 days ago
கோவை:மோட்சத ஏகாதசி தினமான நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மார்கழி வளர்பிறை மோட்சத ஏகாதசி தினமான நேற்று, (டிசம்., 8ல்)போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணர், பகவத்கீதையை, அர்ஜுனனுக்கு உபதேசித்த நாள்.
இந்த மோட்சத ஏகாதசியை சரியான முறையில், பின்பற்றுபவர்கள் அனைத்து பாவங்களிலி ருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.நேற்று (டிசம்., 8ல்) பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவிலில், உற்சவர் கஸ்துாரி ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.