திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிப்பவர்!
ADDED :2163 days ago
திருவண்ணாமலையில் பெரிய கார்த்திகை அன்று மலை தீபமேற்றும் போது, விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். இவர்களை இந்நாளில் ஒரு சேர தரிசிக்கலாம். ஆனாலும் கார்த்திகை விழாவின் கதாநாயகர் அர்த்தநாரீஸ்வரர். மலைதீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிப்பவர் இவரே. இவருக்கு தீபாராதனை ஆனதும் மலையுச்சியில் மகாதீபம் ஏற்றுவர்.