பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2428 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.