விழுப்புரம் முத்துமாரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :1 hours ago
விழுப்புரம்: முத்துமாரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம், முத்துமாரி அம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் முத்துமாரி அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் முத்துமாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பூங்கரகத்துடன், பக்தர்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். மதியம் 1:30 மணிக்கு, அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடந்தது.