சிறுவாபுரி முருகன் கோவிலில் 9ம் தேதி திருக்கல்யாண உத்சவம்
சென்னை: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வள்ளி மணவாள பெருமானுக்கு, வரும் 9ம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடைபெற உள்ளது.
சென்னயை அடுத்த சோழவரம் அருகே, சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரியில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருமணம் கைக்கூட மாலை அணிந்து கொண்டு, வள்ளி மணவாளபெருமானுக்கு வேண்டுதல் செய்து, இக்கோவிலை வலம் வந்தால், திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும், சிறுவாபுரி முருகன் புகழ் பாடும், ‘அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு’ சார்பில், மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு திருக்கல்யாண உத்சவம், வரும் 9-ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 6:00 மணி முதல் விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கும், 9:00 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், 99406 25308, 88259 29351, 94441 44585 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.