உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சிநேகவல்லி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் செயல்அலுவலர் பாண்டியன், கிராம நாட்டார்கள், நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக ஆக.,13ல் தேரோட்டம், 16ல் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் சிநேகவல்லி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !