மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED :1 hours ago
நெய்க்காரபட்டி: பழநி, நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டியில் மகாலட்சுமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி, நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டியில் காமராஜர் வீதியில் மகாலட்சுமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் (ஆக.5)ஆடி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்தது. இன்று (ஆக.6) காலை பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாட்டை துவங்கினர். தூபஸ்தம்பத்தில் விளக்கேற்றப்பட்ட பின் பக்தர்கள் வரிசையாக அமர வைத்து கோவிந்தா கோஷத்துடன் தலையில் தேங்காய் உடைத்து நிறுத்திக் கடன் செலுத்தினர். அதன் பின் அரண்மனை வீட்டில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் நடந்தது ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.