உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகள் அகற்றம்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

சுவாமி சிலைகள் அகற்றம்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலை களை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம், காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் பக்கிரி, குணசீலம். இவர்கள் அதே பகுதியில் உள்ள சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டியிருந்தனர். இதனால் தனது வீட்டுக்கு செல்ல வழியில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த சரோஜினி என்பவர் கடந்த இரண்டு மாதங் களுக்கு முன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார். அதனை தடுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்படி, நகராட்சி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னி லையில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கோவிலை நேற்று (டிசம்., 12ல்) இடித்து அகற்றினர். அங்கிருந்த சுவாமி சிலைகளை பாதுகாப்பாக நகராட்சி அலுவலகத்துக்கு எடுத்து வந்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !