உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வீடு கட்டும் யோகம்

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வீடு கட்டும் யோகம்

துணிந்து முடிவெடுக்கும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் ஒன்றான  சுக்கிரன் டிச. 17ல் தனுசு ராசியில்  இருந்து மகரத்திற்கு மாறினாலும்  நன்மை செய்வார். புதன் டிச.21ல்   விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு செல்வதால் அவரால் நன்மை தர இயலாது.  ஆனால் அவர் ஜன.7ல் மகரத்திற்கு மாறி  நற்பலன் கொடுப்பார். 3-ம் இடத்தில்  இணைந்திருக்கும் கேது, சனி, சூரியனும் உங்களுக்கு நன்மையை வாரி  வழங்குவர். சனி பகவான்  உங்களின் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி  அடையச் செய்வார். பொருளாதார வளம் பெருகும். தொழிலில் சிறப்பான வளர்ச்சி  காணலாம்.

சூரியனால் ஏற்பட்ட வீண் செலவுகள் மறையும். சமூகத்தில் மதிப்பு உயரும்.  உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாயால் டிச.28க்கு பிறகு  சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்கவும்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் ஜன.6 வரை வீண் விவாதங்களில்  ஈடுபட வேண்டாம். ஆனால் சனி, கேதுவால் இடையூறுகளை முறியடிக்கும்  வல்லமை பெறுவீர்கள்.  தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அல்லது  கட்ட யோகம் கூடி வரும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று  வருவீர்கள். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். உங்களை புரிந்து  கொள்ளாமல் இருந்தவர்கள் நெருங்கி வரும் நிலை ஏற்படும். பிள்ளைகளால்  பெருமை காண்பீர்கள்.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். சுக்கிரனால் உறவினர் தக்க  சமயத்தில் உதவுவர். வருமானம் கூடும்.  பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள்  வரப் பெறலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சுய  தொழில் புரியும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.  உடல்நிலை திருப்தியளிக்கும்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு சூரியனால் லாபம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆற்றல்  மேம்படும். திட்டமிட்டபடி சேமிப்பு அதிகரிக்கும்.
* வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். ஆன்மிக சம்பந்தப் பட்ட மற்றும்  பூஜைபொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.7க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
* ஐ.டி., துறையினர்  மேலதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த வீண் அலைச்சல், வேலைபளு மறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் சிறப்பான வளர்ச்சி அடைவர். சக  ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
* பொதுநல சேவகர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப் பெறுவர்.சிலருக்கு புதிய  பதவி கிடைக்க வாய்ப்புண்டாகும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில்  புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.
* விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். குறிப்பாக மானாவாரி பயிர்களில் அதிக  மகசூல் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் சிலர் தொழிலாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.   
* வியாபாரிகள் அரசிடம் எதிர் பார்த்த சலுகை கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல் படவும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்  அதிக சிரத்தை எடுத்தே  பணியாற்ற வேண்டியது இருக்கும்.
* மருத்துவர்கள் பணிச்சுமைக்கு ஆளாக வேண்டியதிருக்கும். அலைச்சல்  ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.
* வக்கீல்கள் வழக்கு, விசாரணை தள்ளிப் போகும். எதிர்பார்ப்பு நிறைவேறுவதில்  தாமதம் உண்டாகும்.
* ஆசிரியர்கள் எதிர்பார்த்த இட மாற்றம் கிடைப்பதில் இழுபறி நீடிக்கும்.  
* அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் மெத்தனம் வேண்டாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன்  கிடைக்காது.  
* மாணவர்கள் விடா முயற்சியுடன் படிப்பதுநல்லது.

* நல்ல நாள்:
டிச.17,18,21, 22,23,26,27 ஜன. 2,3,4,5,6, 11,12,13,14

* கவன நாள்: ஜன.7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
●  தேய்பிறை அஷ்டமியில் ராகு வழிபாடு
●  ஞாயிறன்று ராகு காலத்தில் காளி தரிசனம்
●  புதன்கிழமைகளில் மாட்டுக்கு அகத்திக்கீரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !