அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் மார்கழி உற்ஸவம்
ADDED :2131 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி உலக நன்மை, மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.