உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 26ல் சூரிய கிரகணம்: ஈரோட்டில் கோவில் நடையடைப்பு

வரும் 26ல் சூரிய கிரகணம்: ஈரோட்டில் கோவில் நடையடைப்பு

ஈரோடு: சூரிய கிரகணத்தால், 26ல் கோவில் நடை அடைக்கப்படும் என, நிர்வாகம் அறிவித்
துள்ளது. வரும், 26ல் சூரிய கிரகணம், காலை, 7:30 மணிக்கு தொடங்கி, பகல், 12:00 மணி வரை நீடிக்கிறது.

இதனால், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், பூஜை நேரம் மற்றப்
பட்டுள்ளது. அன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தனூர் மாத உஷத்கால பூஜை, 5:30 மணிக்கு கால சந்தி பூஜை செய்து, 6:30மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பிறகு பகல், 12:00 மணிக்கு திறக்கப்பட்டு, த்ரு கால சாந்தி பூஜை மற்றும் உச்சிகால பூஜை நடந்த பிறகு, நடை சாற்றப்பட்டு, வழக்கம் போல், மாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். கிரகணத்தையொட்டி கேட்டை, மூலம், பூராடம், அஸ்வினி, மகம் நட்சத்திரக்காரர்கள், விநாயகர் மற்றும் சூரிய பகவானுக்கு கோதுமை, கேது பகவானுக்கு கொள்ளு வைத்து, அர்ச்சனை செய்து, சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !