உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை ஷீர்டி சாய்பாபா, தத்தாத்ரேயர் சிலைகளுக்கு வரவேற்பு

சென்னிமலை ஷீர்டி சாய்பாபா, தத்தாத்ரேயர் சிலைகளுக்கு வரவேற்பு

சென்னிமலை: ஸ்ரீஷீர்டி சாய்பாபா, ரியான் அறக்கட்டளை சார்பில், சென்னிமலை  அருகே, முகாசிபிடாரியூரில் ஞானசாயி உலக சமாதான ஆலயம்  அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நிர்மாணிக்க, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மார்பிளில் வடிவமைக்கப்பட்ட ஷீர்டி சாய்பாபா, தத்தாத்ரேயர் சிலைகள், சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், சென்னிமலை நான்கு ராஜா வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.  
ஞானசாயி உலக சமாதான ஆலயத்தில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.  ஜன.,30ல் காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதாக, ஷீர்டி  சாய்பாபா ரியான் சமாதான அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !