வானர ராஜசிம்ம ஹனுமத் ஜெயந்தி பெருவிழா
ADDED :2137 days ago
வெள்ளகோவில்: ஓலப்பாளையம் ஸ்ரீ வானர ராஜசிம்மன் நாமத்வார் ஆலையத்தில் 3 ம் ஆண்டாக ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி பெருவிழா நேற்று நடந்தது.
கடந்த டிசம்பர் 18 ம் தேதி முதல் காலை, மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 23 ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி, தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுமார் மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. மூன்று நாட்களில் ஹனுமார் சந்தன அபிஷேகம், வடைமாலை சாத்தி அபிஷேகம், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவில், ஆன்மீக சொற்பொழிவு, வீணை இசை, பரதநாட்டியம் பக்தி பாடல்கள், என கலை நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.