உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தங்க அங்கி அணிந்து அய்யப்பன் தரிசனம்: பக்தர்கள் பரவசம்

சபரிமலையில் தங்க அங்கி அணிந்து அய்யப்பன் தரிசனம்: பக்தர்கள் பரவசம்

சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மண்டல பூஜை இன்று(டிச.,27) நடக்க இருப்பதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.


மண்டலபூஜைக்காக, 23-ம் தேதி, ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, சரங்குத்தி சென்றது. அங்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மாலை, 6:25 மணிக்கு, 18-ம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி ஆகியோர் பெற்றனர். நடை அடைத்து, மூலவருக்கு அங்கியை அணிவித்தனர். பின் நடை திறந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு தலைவர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !