கரூரில் சீதா கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்
ADDED :2189 days ago
கரூர்: கரூரில் நடந்த, சீதா கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர், பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க, 33வது ஆண்டு விழா கடந்த, 23ல் துவங்கியது. அதையொட்டி, சுப்பிரமணிய சண்முக ஷடா சர ஹோமம், 24ல் ஏக தின லட்சார்ச்னை, குத்து விளக்கு பூஜை ஆகியவை ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடந்தன.
கடந்த, 25ல் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா நடந்தது. நேற்று டிசம்., 29ல் காலை, ரமேஷ் பாகவதர் தலைமையில், 19வது சீதா கல்யாண உற்சவம் நடந்தது. அதில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சீதா - ராமர் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.