உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ’பகல் பத்து’ உற்சவம் கோலாகலம்

சேலம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ’பகல் பத்து’ உற்சவம் கோலாகலம்

சேலம்: வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, லட்சுமி நரசிம்மர் கோவிலில், ’பகல் பத்து’ உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. சேலம், மன்னார்பாளையம் பிரிவு சாலை அருகேயுள்ள, பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில் கடந்த, 26ல் திருநெடுந்தாண்டகத் துடன் நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது. 27 முதல் ’பகல் பத்து’ உற்சவம் தினமும் மாலையில் கோலாகலமாக நடந்து வருகிறது.

நான்காம் நாளான நேற்று (டிசம்., 30ல்) மாலை, உற்சவர் நரசிம்மர் சவுரி கொண்டையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பல்லாண்டு கோஷ் டியினர் திவ்ய பிரபந்தம், ஆழ்வார் திருமொழி பாசுரங்களை பாடி ஆராதனை செய்தனர். சிறப்பு பூஜை செய்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஜன.,5 இரவு நரசிம்மர் ’மோகினி’ அலங்காரத்தில், நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை ஸாதிப்பார். ஜன.,6 காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். அன்றிலிருந்து, ’ராப்பத்து’ உற்சவம் துவங்கி, 10 நாட்கள் நடக்கவுள்ளது. ஜன.,15ல் ஆழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !