திருக்கோவிலுார் ஸ்ரீரகூத்தமர் சுவாமிகளின் ஆராதனை விழா
ADDED :2124 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், மணம்பூண்டி, ஸ்ரீரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 447வது ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 5ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீரகூத்தம தீர்த்த சுவாமிகளின் மூல பிருந்தா வனம் திருக்கோவிலுார், மணம்பூண்டி தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.
அவரது 447வது ஆண்டு ஆராதனை விழா வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.முதல் நாள் அதிகாலை 5:00 மணிக்கு மூல பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய பூஜையுடன் பீடாதிபதி சத்யார்த்தமதீர்த்த சுவாமி கள் விழாவை துவக்கி வைக்கிறார். இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரக்கூடும் என்பதால், விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.