கொடைக்கானல் மலைப் பகுதியில் புத்தாண்டு வழிபாடு
ADDED :2119 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப் பகுதியில் ஆங்கில புத்தாண்டை அடுத்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பூம்பாறை குழந்தை வேலப்பர், கொடைக்கானல் குறிஞ்சி யாண்டவர், மாரியம்மன் கோயில், தாண்டிக்குடி பாலமுருகன், கானல் காடு பூத நாச்சியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்கரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.