உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் தீர்த்தக்குட ஊர்வலம்

சக்தி மாரியம்மன் தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சானார் பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15 நாட்களுக்கு முன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய கலையான கரகாட்டத்துடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று காலை, 6:00 மணிக்கு கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் திருவீதி உலா மற்றும் மறுபூஜை நடைபெற உள்ளன. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இரவு, 8:00 மணிக்கு தமிழ்தாய் நற்பணி மன்றத்தாரின், என் உயிர் நீதானே எனும் நாடகம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !