எல்லை மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2121 days ago
சென்னிமலை நகரின், காவல் தெய்வமாக விளங்கும், எல்லை மாகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம் நடந்த நிலையில், முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று காலை நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது, விழா ஏற்பாடுகளை அம்மா பாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம கவுண்டர்கள், கோவில் நிர்வாக குழுவினர் செய்தனர்.