தபோவனம் ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஆராதனை விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஞானானந்தகிரி சுவாமிகளின் 46ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு வேதபாராயணம் துவங்கியது.
காலக் கணக்கிற்கு அடங்காத நீண்ட நெடு வாழ்வு வாழ்ந்த மகான் ஞானானந்தகிரி சுவாமிகள். அதிஷ்டானம் அமைந்துள்ள திருக்கோவிலூர், தபோவனத்தில், 46 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 28ம் தேதி காலை 5:00 மணிக்கு மூர்த்திகள் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 6:00 மணிக்கு சண்டி கடஸ்தாபனம், சுக்ல யஜுர் வேதம், ரிக் சாம வேதம், தேவி பாகவதம், சங்கர பாஷ்யம், சிவாகமம். ஸ்ரீமத் ராமாயணம் பாராயணங்கள் துவங்கியது. இவை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. அதிஷ்டானத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.
நாளை முதல் 11ம் தேதி வரை தினசரி மாலை 3:00 மணிக்கு பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உபன்யாசம் நடக்கிறது. விழாவின் நிறைவாக 12ம் தேதி காலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், 10:15 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.