உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 8ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 8ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதேசிபெருவிழாவில், பகல் பத்து 8ம் நாள் நம்பெருமாள் கிருஷ்ணர் சவுரி கொண்டை, கலிக் கதுழாய், காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, லட்சுமிபதக்கம், முத்துச்சரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

கோவிலில் மார்கழி மாத பாவை நோன்பு 18 ம் நாளான இன்று பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் உந்து மதகளிற்றன் என்று தொடங்கும் திருப்பாவையின் 18-ம் பாசுரத்திற்கு ஏற்ப திருப்பாவை ஜீயர் (உடையவர்) காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !