கம்பருக்காக கர்ஜித்தவர்
ADDED :2136 days ago
கம்பராமாயணம் ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது அதில் நரசிம்மர் வரலாறு இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ""ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி குறிப்பிடக் கூடாது” என தடுத்தனர். அப்போது கர்ஜித்தபடி தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர், ""கம்பரின் கூற்று உண்மை” என ஆமோதித்து தலையசைத்தார். இந்த நரசிம்மரை "மேட்டழகிய சிங்கர் என்பர். இவரே தாயார் சன்னதிக்கு அருகில் வீற்றிருக்கிறார்.