நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் கூடாரவல்லி திருவிளக்கு பூஜை
ADDED :2140 days ago
நாமக்கல்: நாமக்கல், அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதம் அதிகாலை பக்தர்கள் பஜனையுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, சுவாமி தரிசனம் செய்வர். ஞாயிற்று கிழமைகளில் விளக்கேந்தி, மலைக்கோட்டையை வலம் வருவர்.மார்கழி, 27ல் கூடாரவல்லி நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், நேற்று நாமக்கல் இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில், 49ம் ஆண்டு கூடாரவல்லி, பல்லாண்டு படி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அரங்கநாதர் கோவில் படிவாசலில், பெண்கள் வாழையில் குத்து விளக்கு தீபம் ஏற்றி வைத்து பல்லாண்டு படி விழா நடந்தது. 7:30 மணிக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதில், பல்வேறு மலர்களால் கூடாரம் அமைத்து, அதில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.