திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.31 லட்சம்
ADDED :2446 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், துணை கோயில்களான சொக்கநாதர் கோயில், அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவன் கோயில், பழனி ஆண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன.துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தலைமை வகித்தார். இதில் ரூ. 31 லட்சத்து ஆயிரத்து 888, தங்கம் 118 கிராம், வெள்ளி ஒரு கிலோ 366 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், வேத பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஐயப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.