சுவாமி மலையில் காவடித் திருவிழா
ADDED :2159 days ago
நான்காம் படைவீடான சுவாமிமலையில், சென்னை நங்கநல்லுார் சேவார்த்திகள் டிரஸ்ட் சார்பில் பிப்.28 – மார்ச்1 வரை காவடி உற்ஸவம் நடக்கிறது. இதில் 10,008 சண்முக மூலமந்திர ஹோமம், பால் காவடிகள், ரங்கோலி அலங்காரம், விளக்கு பூஜை, வள்ளி கல்யாணம் நடக்க உள்ளன. நையாண்டி, தெய்வேந்திர மேளத்துடன் ஒருமாத காலம் விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக காவடிகள் எடுத்து வர, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். விழாவில் ஒன்று - 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மூன்று நாளும் அன்னதானம் உண்டு.