மண்டகப்பட்டு கோவில் கும்பாபிஷேகம்
மயிலம்:மண்டகப்பட்டு மன்னாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. கூட்டேரிப்பட்டு அருகே உள்ள மண்டகப்பட்டு, ரெட்டணை, ஆலகிராமம், ஒளவையார்குப்பம் ஆகிய கிராமங்களின் சந்திப்பில் அமைந்துள்ள மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன், கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 4ம் தேதி மயிலம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் நடக்கிறது. இதனையொட்டி வரும் 2ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி, லட்சுமி, நவக்கிரக யாக பூஜை யும், இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜையும், மறு நாள் காலை 9 மணிக்கு இரண்டாம், மூன் றாம் கால யாக சாலை வழிபாடும் நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.